உக்ரைன் நெடுநோக்கு பற்றி நேட்டோவின் போலிக்கூற்றுக்கு சீனா எதிர்ப்பு

நேட்டோவின் வாஷிங்டன் உச்சிமாநாட்டு அறிக்கை உள்ளூர் நேரப்படி ஜூலை 10ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீனா, நேட்டோவின் நலன், பாதுகாப்பு மற்றும் மதிப்புக்கு அறைகூவல் விடுத்ததுடன் ரஷிய-உக்ரைன் மோதலில் ரஷியாவின் தீவிர உதவியாளராக இருப்பதாகவும் இவ்வறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.

இதுவரை இரண்டரை ஆண்டுகால நீடித்துள்ள இந்த மோதல் ஏற்பட்ட காரணம் பற்றி சர்வதேச சமூகம் மென்மேலும் அமைதியாகவும் பகுத்தறிவுடனும் சுய மதிப்பீடு செய்துள்ளது. பனிப்போர் முடிவடைந்த பின், அமெரிக்காவின் தலைமையுடன் நேட்டோ தொடர்ந்து கிழக்கு நோக்கி விரிவாகி வருகிறது. ரஷியாவின் பாதுகாப்பு இடங்களை இடைவிடாமல் கைப்பற்றியது. இதுவே, ரஷிய-உக்ரை மோதல் ஏற்படுவதற்கான ஊற்றுமூலம் ஆகும்.

இந்த மோதலில் தங்களது பொறுப்பை மூடிமறைக்கும் வகையில் நேட்டோ போலியான விஷயங்களைக் கூறுவதன் மூலம் சீனாவை பலிகடாவாக மாற்ற முயற்சிக்கிறது. நடப்பு உச்சி மாநாடு நடைபெறும் முன், நேட்டோ தரப்பு சீனாவின் மீது அடிக்கடி குற்றம் சாட்டி, அச்சுறுத்தியுள்ளது. சீனா ரஷியாவுக்கு ஆயுத ஆதரவளிப்பதாக அவதூறு பரப்பியது. ஆனால், இதுவரை எந்தெந்த சான்றுகளையும் அமெரிக்காவினால் வழங்க முடியவில்லை.

சீனா உக்ரைன் நெருக்கடியை உருவாக்கிய மற்றும் தொடர்புடைய தரப்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது சீனாவின் மைய நிலைப்பாடாகவுள்ளது. இந்நிலைப்பாடு உலகளவில் ஏற்றுக்கொண்டதுடன் பாராடுகளையும் பெற்றுள்ளது.பல்வேறு நாடுகளின் நாட்டுரிமை மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். ஐ.நா சாசனம் மற்றும் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அமைதி தீர்வுக்கான அனைத்து முயற்சிகளும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்று சீனா எப்பொழுதும் கருத்து தெரிவித்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author