உக்ரைன் நெருக்கடி பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை வாங் யீ அறிமுகம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஜுன் 4ஆம் நாள் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபிடனுடன் இணைந்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது பற்றிய சீனாவின் அடிப்படை கருத்தை விவரித்தார்.
அவர் கூறுகையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதை விரைவுபடுத்துவது சீனாவின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்தார்.

உக்ரைன் நெருக்கடி தொடர்பாக சர்வதேச சமூகம் மேலதிக சமமான ஆக்கப்பூர்வ குரலை எழுப்ப வேண்டும். உக்ரைன் நெருக்கடியை அரசியல் வழிமுறையில் தீர்ப்பது தொடர்பான 6 அம்ச பொது கருத்தை சீனாவும் பிரேசிலும் அண்மையில் வெளியிட்டன என்று தெரிவித்தார்,


அவர் மேலும் கூறுகையில் வெளியுறவு அமைச்சர் ஃபிடனுடன் இது பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன். 6 அம்ச பொது கருத்தை துருக்கி வரவேற்று பாராட்டுகிறது. குறுகிய ஒரு வாரத்துக்குள் 45 நாடுகள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் இப்பொது கருத்துக்கு ஆக்கப்பூர்வ பதிலளிக்கின்றன.

ரஷியா மற்றும் உக்ரைன், இப்பொது கருத்தின் அதிக அம்சங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. 6 அம்ச பொது கருத்து பெரும்பாலான நாடுகளின் பொது எதிர்பார்ப்புக்கு பொருந்தியதை இது வெளிப்படுத்துகிறது. மேலதிக நாடுகள் இப்பொது கருத்தை ஆதரித்து, அமைதியை வெகுவிரைவில் நனவாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author