உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டும் ஆற்றல்: சீனாவின் பதில்

Estimated read time 0 min read

மார்ச் 7ஆம் நாள் வியாழக்கிழமை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, என்.பி.சி. (தேசிய மக்கள் பேரவையின்) 2024ஆம் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் அடுத்தடுத்து 21 கேள்விகளுக்குப் பதிலளித்தார்.


இதில், உலகளவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை நிலைநாட்டும் ஆற்றலாக சீனா விளங்குவது என்ற தெளிவான பதில் கிடைத்துள்ளது. பல வெளிநாட்டு ஊடகங்கள், அதனை சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் பிரகடனமாகப் பார்க்கின்றன.


அமைதி என்பது முதன்மை விஷயமாகும். சூடான பிரச்சினைகளுக்கு சீனத் தத்துவமான தீர்வு வழிமுறைகளை சீனா இச்செய்தியாளர் கூட்டத்தில் விளக்கமாகக் கூறியுள்ளது. அதாவது, பிற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாமை, அரசியல் வழிமுறை மூலம் தீர்வு, புறநிலை மற்றும் நேர்மையான நிலைப்பாடு, நோய் அறிகுறிகள் மற்றும் மூலகாரணம் இரண்டையும் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பது என்ற தத்துவம் அடிப்படையில் உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகியவற்றைப் பின்பற்றுவதாகும்.
நிலைத்தன்மை என்பது வளர்ச்சிக்கான அடிப்படையாகும்.

உலக மக்களுக்கு எப்படியான சர்வதேச ஒழுங்கு தேவை? சமத்துவம் மற்றும் ஒழுங்குமுறையுடன் கூடிய பல்துருவ உலகம், அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார உலகமயமாக்கம் ஆகியவை, சீனாவின் பதிலாகும்.
வளர்ச்சி என்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய திறவுகோலாகும்.

2023ஆம் ஆண்டு 5.2 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள சீனா, உலகளாவிய வளர்ச்சிக்கு மூன்றில் ஒரு பகுதியான பங்களிப்பை ஆற்றியுள்ளது. சீனாவின் நவீனமயமாக்கல் உலகத்துக்கு நன்மை அளித்து வருகிறது. சீனாவில் வளர்ச்சி வாய்ப்புகளைத் தவறவிடப்படக் கூடாது.

Please follow and like us:

You May Also Like

More From Author