ஐ.நாவில் ஆதரவு இழந்து வரும் அமெரிக்கா

நடப்பு பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் தற்போதுவரை 5200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா பகுதியில் மனிதநேர நெருக்கடி தீவிரமாக மோசமாகி வருகிறது. இத்தகைய துயரமான நிலையில், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையுடன் தொடர்புடைய முக்கியத் தரப்பான அமெரிக்கா, மோதலில் சிக்கியுள்ள தரப்புகளை அமைதிப்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பவையில் மனிதநேய மீட்புதவிக்கான வரைவு தீர்மானத்தை 2 முறை நிராகரித்துள்ளது. இம்மோதலின் தீவிரத்தையும் மேலதிக அப்பாவி மக்களின் உயிரிழப்பையும் வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவின் செயல் குறித்து, பிரேசில், ரஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் அதிர்ச்சி மற்றும் வருத்தம் அடைந்துள்ளன. பல்வேறு தரப்புகள் சர்வதேச மனிதநேய சட்டத்தைப் பின்பற்றுமாறு அமெரிக்கா எப்போதுமே கோருவதாகவும், ஆனால் ஐ.நா. பாதுகாப்பவையின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்த செயல் தனது முகத்தை அடிப்பது போல் இருப்பதாகவும் பிரிட்டனின் தி கார்டியன் நாளேடு மனித உரிமை அமைப்பின் அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டி தெரிவித்தது.
அமெரிக்காவின் இச்செயலுக்கு காரணம் என்ன? மத்திய கிழக்கு நிலைமையைப் பார்த்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சொல்லத் தேவையற்ற பரிவர்த்தனை உறவு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றை மீளாய்வு செய்தால், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்கா ஒருபோதும் நடுநிலையில் இணக்கம் செய்யாமல், ஒரு தரப்புக்கு மட்டுமே ஆதரவளித்து தலையீடு செய்யும் தரப்பாகவே இருந்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்தேஃபென் வால்ட் வெளியுறவு கொள்கை எனும் இதழில் வெளியிட்ட கட்டுரையில், தற்போதைய பாலஸ்தீன-இஸ்ரேல் போருக்கு அமெரிக்கா ஊற்றுமூலமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
போரில் எந்த தரப்பும் வெற்றி பெறாது. வன்முறை மூலம் வன்முறையைத் தடுப்பதில் மேலும் கடுமையான நெருக்கடி ஏற்படும். அமெரிக்கா பொறுப்புணர்வுடன் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலை சொந்த நாட்டில் கட்சிகளின் போட்டிக்கான கருவியாகவும் மற்ற நாடுகளைத் தாக்கும் வாய்ப்பாகவும் பயன்படுத்தும் செயலை நிறுத்தி, சர்வதேச சமூகத்துடன் இணைந்து போர் நிறுத்தத்தை முன்னேற்ற வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author