கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொண்டு வந்த சாதனைகள்

சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் அக்டோபர் 17、18 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. உலகளவில் 140க்கும் அதிகமான நாடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கெடுப்பர். உலகளாவிய வளர்ச்சி சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. கடந்த 10ஆண்டுகளில், இதன் மூலம் 3000க்கும் அதிகமான ஒத்துழைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு,  இலட்சம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படுள்ளது. உலக வங்கி வெளியிட்ட ஆய்வுத் தரவுகளின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவினை முழுமையாகச் செயல்படுத்தப்படுவதன் மூலம் அதன் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையே வர்த்தக நடவடிக்கைகள் 4.1விழுக்காடு அதிகரிக்க கூடும் எனத் தெரியவந்துள்ளது. மேலும்,  2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 60ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு நாடுகளில் உள்ள 76இல்டசம் மக்கள் இதன் மூலம் தீவிர வறிய நிலைமையிலிருந்து விடுபடக் கூடும். ஒரு மண்டலம் ஒரு பாதைத் திட்டமானது, பொருளாதாரப் பலன் மட்டுமின்றி, புதிய ஆட்சிமுறை மாதிரியையும் கொண்டு வந்தது. சீனா உள்ளிட்ட நாடுகளைக் கொண்டு  தொடங்கப்பட்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி என்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பில் பங்கெடுக்கும் நாடுகள் நிதி திரட்டுவதற்கான வழிகளை அதிகரிக்கவும்,  உலகளாவிய ஆட்சிமுறை அமைப்பை முழுமைப்படுத்தவும் துணைபுரியும்.

 

மேற்கூறிய நடைமுறைகள் அனைத்தும் பரந்த கலந்தாய்வு, கூட்டு பங்களிப்பு மற்றும் நன்மைகளின் பகிர்வு ஆகிய கோட்பாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

 

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவானது, இத்திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகளின் சுய திறன் ஆக்கப்பணிக்கு உதவி அளித்து வருகின்றது. வளர்ச்சி அனுபவங்களின் பகிர்வு தொடங்கி  திறமைசாலிகளின் வளர்ச்சி, நாடு கடந்த இணையவழி வர்த்தகம், புதிய தொழில்களில் வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களை இணைப்பது வரை, சீனா தனது வளர்ச்சி மூலம் உலகிற்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author