காலநிலை ஒத்துழைப்புக்கு ஒரே திசை முயற்சி எடுக்க வேண்டும்: சீனா

 

21ஆம் நூற்றாண்டின் 20 ஆண்டுகள் காலநிலை மாற்றச் செயல்பாட்டுக்கான சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான பணிக் குழுக்களின் கூட்டம் மே 8、9 ஆகிய நாட்கள் வாஷிங்டன் டி.சி.இல் நடைபெற்றது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் கூறுகையில், இக்கூட்டத்தில், எரியாற்றல் வளர்ச்சி மற்றும் மாற்றம், மீத்தேன் மற்றும் இதர கரியமில வாயு சாரா பசுங்கூடவாயுக்கள், சுழற்சி முறை பொருளாதாரம், மூலவளப் பயன்பாட்டு திறன் முதலிய துறைகளில் இரு தரப்புகள் ஆழ்ந்த முறையில் விவாதம் நடத்தின என்று தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்ற காப்-29 மாநாடு நடைபெறும்போது, மீத்தேன் மற்றும் இதர கரியமில வாயு சாரா பசுங்கூடவாயுக்கள் குறித்த உச்சி மாநாட்டை நடத்த இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

வரும் 29、30 ஆகிய நாட்கள் காலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் நடைபெற உள்ள காலநிலை மாற்றதுக்கான உள்ளூர் செயல்பாடு குறித்த சீன-அமெரிக்க உயர் நிலை நடவடிக்கை மீது எதிர்பார்ப்பு கொண்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பை சீனாவுடன் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்ததோடு, சீனாவின் புதிய எரியாற்றல் தயாரிப்புகளுக்கு அதிக உற்பத்தி திறன் பிரச்சினை நிலவுகின்றது என்பதை அமெரிக்கா மிகைப்படுத்தி, சீனாவின் தொடர்புடைய தயாரிப்புகள் மீது கூடுதல் சுங்கவரி வசூலிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வாங் வென்பின் கூறுகையில், சாலைகள் அமைப்பதோடு, துளை தோண்டும் செயல்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். காலநிலை மாற்றுத்துக்கான இரு நாட்டு ஒத்துழைப்புக்கும், உலகளாவிய தூய்மை வளர்ச்சிக்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author