காலநிலை விவகாரத்துக்கான அமெரிக்க தூதருடன் வாங் யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிவிவகார ஆணையத்தின் அலுவலகத் தலைவர் வாங் யீ, ஜுலை 18ஆம் நாள் பெய்ஜிங்கில் காலநிலை விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரியுடன் சந்திப்பு நடத்தினார்.


வாங் யீ கூறுகையில், உலகிற்கு நிலையான சீன-அமெரிக்க உறவு தேவைப்படும். கடந்த ஆண்டின் நவம்பர் பாலி தீவில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களை நடைமுறையில் கொண்டு வந்து, சீன-அமெரிக்க உறவை சீரான வளர்ச்சிப் போக்கில் மீண்டும் நுழைய வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


மேலும், காலநிலை மாற்றத்தைக் கூட்டாக சமாளிக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. இரு நாடுகளிடையேயான காலநிலை மாற்றத்துக்கான ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு இரு நாட்டு மக்களின் புரிந்துணர்வு மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது.

அது சீன-அமெரிக்க உறவை சார்ந்திருக்கிறது என்றும் வாங் யீ குறிப்பிட்டார்.


ஒரே சீனா கொள்கையை எப்போதும் கடைப்பிடித்து வரும் அமெரிக்கா, ஒன்றுக்கு ஒன்று மரியாதை அளிக்கும் அடிப்படையில், சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இரு நாடுகளிடையேயான கருத்து வேற்றுமை மற்றும் வேறுப்பாடுகளை உரிய முறையில் கையாண்டு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அறைக்கூவல்களைச் சமாளிக்க அமெரிக்கா செயல்படும் என்றார் ஜான் கெர்ரி.

Please follow and like us:

You May Also Like

More From Author