கூடுதலான சுங்க வரியை உயர்த்த அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டு

Estimated read time 1 min read

கூடுதலான சுங்க வரியை உயர்த்த அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டு

சீன தயாரிப்புகள் மீது கூடுதலான சுங்க வரியை உயர்த்துவதாக அமெரிக்க அரசு 14ஆம் நாள் அறிவித்தது.

இது குறித்து உலகளவில் சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்கா, பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினையைத் தொடர்ந்து அரசியல்படுத்தி வருவதுடன், சீன-அமெரிக்க இயல்பான வர்த்தகத் தொடர்பைச் சீர்குலைத்து, தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவித்து வருகிறது.

இறுதியில் அமெரிக்கா முன்பை விட தனக்குத் தானே கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்று பல ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
சீனாவின் புதிய ஆற்றல் தொழிலை இலக்கு வைத்து, அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இத்தடைகளால், முன்னதாக சீனாவின் மின்சார வாகனங்கள், லித்தியம் மின்கலம், சில்லுகள் முதலியவை அமெரிக்கச் சந்தையில் பெருமளவில் இருக்காது. தொடர்புடைய சீனத் தொழில்கள், அமெரிக்கச் சந்தையைச் சார்ந்திருப்பதில்லை.

அதனால், கூடுதலான சுங்க வரி வசூலிப்பு, சீனத் தொழில் நிறுவனங்களுக்கு உண்மையான பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஜப்பானின் நிக்கேய் என்ற ஊடகம் தெரிவித்தது.
சீனாவின் புதிய ஆற்றல் தொழில், திறப்பு மற்றும் போட்டி நிறைந்த சூழ்நிலையில் முன்னேற்றங்களைப் படைத்துள்ளது.

அதன் வளர்ச்சி, உலகின் விநியோகத்தைப் பல்வகைப்படுத்தி, உலகளவில் பணவீக்க நிர்பந்தத்தைத் தணிவு செய்து, காலநிலை மாற்றச் சமாளிப்பு மற்றும் பசுமை மாற்றத்திற்கு மாபெரும் பங்கு ஆற்றி வருகிறது. சீனாவை மட்டுப்படுத்த முயலும் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author