சந்திரனின் மாதிரிப் பொருட்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டன

Estimated read time 1 min read

சீனத் தேசிய விண்வெளி ஆய்வுப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, ஜுன் 6ஆம் நாள் பிற்பகல் 2 மணி 48 நிமிடத்தில், சாங் ஏ-6 விண்வெளி ஆய்வு கலத்தின் ஏறுதல் இயந்திரம், சுற்றுப்பாதை இயந்திரம் மற்றும் பூமிக்குத் திரும்பும் இயந்திரத்துடன் சந்திரப் பாதையில் வெற்றிகரமாக சந்தித்து, பிற்பகல் 3 மணி 24 நிமிடத்தில், சந்திரனின் மாதிரிப் பொருட்களை பூமிக்குத் திரும்பும் இயந்திரத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பியது.


சாங் ஏ-6 விண்வெளி ஆய்வு கலத்தின் ஏறு இயந்திரம் ஜுன் 4ஆம் நாள் முற்பகல் சந்திரனின் இருள் பக்கத்திலிருந்து புறப்பட்டு, சந்திரனைச் சுற்றிப் பயணப் பாதையில் நுழைந்தது முதல் இதுவரை, 4 முறையாக பாதை மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிறகு, சாங் ஏ-6 விண்வெளி ஆய்வு கலத்தின் சுற்றுப்பாதை இயந்திரம் மற்றும் பூமிக்குத் திரும்பும் இயந்திரம், ஏறுதல் இயந்திரத்துடன் பிரிக்கப்படும். திட்டப்படி, பூமிக்குத் திரும்பும் இயந்திரம், சந்திரனின் மாதிரிப் பொருட்களுடன் உள் மங்கோலியாவில் தரையிறங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author