சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை எடுத்துக்காட்டும்: விடுமுறை நாட்கள் நுகர்வுச் சந்தை

Estimated read time 0 min read

இவ்வாண்டின் மே தின விடுமுறை நாட்களில், சீனாவில் சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை 29.5 கோடியை எட்டி, கடந்த ஆண்டை விட 7.6 சதவீதம் அதிகரித்தது. உள்நாட்டில் சுற்றுலா பயணிகளின் செலவுத் தொகை 16689 கோடி யுவானாக பதிவாகியது.

இது முந்தைய ஆண்டை விட 12.7 சதவீதம் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விடுமுறை நாட்களில் நுகர்வுச் சந்தையின் வளர்ச்சி, சீனப் பொருளாதராரம் சீராக வளரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், சர்வதேச விமானச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது,

எல்லை நுழைவுக் கொள்கையை எளிதாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ள அதேவேளையில் விசா விலக்குக் கொள்கையில் இணைந்துள்ள நாடுகள் அதிகரித்துள்ளன. இதனால், எல்லை நுழைவு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் விரைவாக மீட்சி பெற்று வருகிறது.

சிங்கப்பூர் நாட்டின் லியன்ஹெசாவ்பாவ் எனும் பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில், மே தின விடுமுறையில், சீனாவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களின் சீட்டுகளின் முன்பதிவு ஒரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சீனர்களுக்கு விசா விலக்குக் கொள்கை என்று கியூபா அறிவித்ததைத் தொடர்ந்து, சீனாவின் சுற்றுலா சேவை இணையதளங்களில் கியூபாவில் தங்கும் விடுதி மற்றும் விமான கட்டணம் தொடர்பாக தேடும் அளவு 40சதவீதம் ஏற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. கியூபாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் கூறுகையில் இந்த கொள்கை, உள்ளூர் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றுலா தொழிலுக்கு புதிய வாய்ப்பை கொண்டு வரும் என்று தெரிவித்தார்.


விடுமுறைப் பொருளாதாரம், சீனப் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக கருதப்படுகிறது. எதிர்பார்த்ததை விட பல நுகர்வுப் புள்ளிவிவரங்கள், அதிகம். இது, சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலையும் உயிராற்றலையும் காட்டுகிறது. உண்மை மற்றும் தரவுகளைப் பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளில் சிலர் பரப்பி வரும் சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைந்து விட்டது என்ற கருத்து, தவறு என்பது தெளிவாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author