சீனாவின் ‘அதிக உற்பத்தி திறன்’ மீதான அமெரிக்காவின் கவனம்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம் 24ஆம் நாள் நடைபெற்றது. அண்மையில், ஜி 7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் போது, ‘அதிக உற்பத்தி திறன்’குறித்த கவலையை சீனாவிடம் தெரிவிப்பார் என்று இக்கூட்டறிக்கையில் கூறப்பட்டது.


இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் கூறுகையில்,
அண்மையில், ‘அதிக உற்பத்தி திறன்’என்ற சாக்குப்போக்கில், சில மேலை நாடுகள் சீனா மீது குற்றஞ்சாட்டி வருகின்றன. இது, நியாயமற்றது. இதற்குச் சீனா கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்றார்.


சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் கண்காணிப்பின்படி, கார்பன் சமநிலை என்ற இலக்கை நனவாக்கும் வகையில், உலகில் புதிய எரியாற்றல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில், 4 கோடியே 50 இலட்சத்தை எட்ட வேண்டும். மேலும், ஒளிவோல்ட்டா மின்கல உற்பத்தி திறனை பெரிதும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


‘அதிக உற்பத்தி திறன்’கூறப்படுவது, பாதுகாப்புவாதத்திற்கு சாக்குப்போக்காகும். சீனாவின் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புதிய எரியாற்றல் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியகால், பல தரப்புகளுக்கு இழப்பு கொண்டு வரும்.

வெளிநாட்டுத் திறப்பு எனும் அடிப்படை கொள்கையில் சீனா ஊன்றி நின்று வருகிறது. பல தரப்புகளுடன் சேர்ந்து, நேர்மையாக போட்டியிட்டு, கூட்டு நலன்களை நனவாக்க வேண்டும் என்றார் அவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author