சீனாவின் சர்வதேச செல்வாக்குக்கு பாராட்டு

சர்வதேச அளவில் சீனா செல்வாக்குமிக்க நாடாகவும், வெற்றி பெற்ற நாடாகவும் திகழ்வதாக பிரான்ஸில் சிஜிடின் மற்றும் சீன ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸில் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு இக்கருத்துக் கணிப்பு நடைபெற்றது.

சீனாவின் வளர்ச்சி என்பது பிரான்ஸ் உள்பட உலகிற்கு ஒரு வாய்ப்பாகும். சீனாவின் உயர்திறன் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக அளவு திறப்பு ஆகிய சாதனைகளுக்கு கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர். சீனாவின் வலுவான பொருளாதார வலிமை பாராட்டுக்குரியது என்று 91.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இவர்களில் 95 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. உலகப் பொருளாதாரத்துக்கு சீனாவின் பங்களிப்பு அளப்பறியது என்று 72 விழுக்காட்டுக்கும் மேலானோர் கூறியுள்ளனர்.

அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சீனா வலுவாக உள்ளதாக 88 விழுக்காடுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். அறிவியல் துறையில் சீனாவின் சீரிய எழுச்சியானது உலகளாவிய புத்தாக்கத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் 71 விழுக்காட்டுக்கும் மேலானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சீனா ஒரு போட்டியாளர் என்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கருத்தை கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சீனாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே தூதரக உறவு துவங்கப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 800 மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக பிரான்ஸும், ஆசிய அளவில் பிரான்ஸின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனாவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author