சீனாவின் சீர்திருத்தப் பணியை முன்னேற்றி வருகின்ற ஷி ட்சொங்ஷுன் மற்றும் ஷி ச்சின்பிங்

Estimated read time 0 min read

ஆல மரம், அற்புதமான உயிராற்றலை கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள், 87 வயதான ஷி ட்சொங்ஷுன், குடும்பத்தினருடன் இணைந்து ஷென்ட்சென் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதியில் ஆல மரம் ஒன்றை நட்டார்.

குவாங்தொங் மாநிலத்தின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பைப் பெரிதும் முன்னேற்றுவதற்கான அவரது விருப்பத்தை இது வெளிப்படுத்தியுள்ளது.
குவாங்தொங் மாநிலத்தில் பணி புரிந்த 2 ஆண்டுகளில், அவர் பல முன்னோடி பணிகளை மேற்கொண்டார்.

கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்திருத்தம் செய்வது, தொழில் பயிர்கள், கால்நடை மற்றும் மீன்பிடி தொழில் துறையை வளர்ப்பது, எல்லை பகுதியில் சிறுதொகை வர்த்தகத்தை முன்னேற்றவது முதலிய புத்தாக்க நடவடிக்கைகள், குவாங்தொங் மாநிலத்தின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, நாட்டின் முன்னணியில் இருப்பதற்கு அடிப்படையை உருவாக்கியுள்ளன.


தந்தையின் செயல்கள், ஷி ச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
1982ஆம் ஆண்டு, அடிமட்ட இடத்தில் பணி புரிய ஷி ச்சின்பிங் தயக்கமின்றி விண்ணப்பம் செய்தார். ஹேபெய், ஃபூஜியான், சேஜியாங், ஷாங்காய் ஆகிய இடங்களில் அவர் பணி புரிந்தார். பல்வேறு இடங்களில் அவர் ஆழமாக ஆய்வு செய்து, எதிர்கால வளர்ச்சியை உள்ளூர் நடைமுறையாக்கத்துடன் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சீர்திருத்த வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை முன்வைத்தார்.

புதிய யுகத்தில் இவை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
2012ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷி ச்சின்பிங் குவாங்தொங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

ஷென்ட்சென் நகரின் லியான்ஹுவாஷான் பூங்காவில் அவர் ஆல மரம் ஒன்றை நட்டார். தந்தையின் தலைமுறையினர்கள் சீர்திருத்தம் மேற்கொண்ட வரலாற்றை மீளாய்வு செய்ததோடு, சீனாவில் சீர்திருத்தத்தை ஆழமாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


ஷி ட்சொங்ஷுன் மற்றும் ஷி ச்சின்பிங் நட்ட இரு ஆல மரங்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. தற்போது, சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் பாதையில் சீனா முன்னேறி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author