சீனாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி, உண்மையில் குழாய் தண்ணீரா? வைரலான வீடியோவால் உருவான சர்ச்சை

Estimated read time 1 min read

சீனாவில் உள்ள பிரபலமான யுண்தாய் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் ஒரு மலை உச்சியிலிருந்து ராட்சச குழாய் மூலம் தண்ணீர் கொட்டுவதை காட்டும் வீடியோ ஒன்று, சீன சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டது.
இந்த வீடியோ வைரலான பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்திற்காக மழை இல்லாததால், வறட்சி காலங்களில் “சிறிய விரிவாக்கம்” செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அந்த ‘செயற்கை’ நீர்வீழ்ச்சி ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
சீனாவின் வட-மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள யுண்டாய் மலைப் பூங்காவில் அமைந்துள்ள 314 மீட்டர் உயரமுள்ள யுண்டாய் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வழங்கும் குழாய் பொறுத்தப்பட்டிருந்ததாக ஒரு வீடியோ வெளியானது.
இந்த வீடியோவை அங்கே வந்த டூரிஸ்ட் ஒருவர் டிரோன் கேமரா பயன்படுத்தி, வீடியோ எடுத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author