சீனாவில் தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலத்தின் கட்டுமானம்

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 27ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலத்தின் கட்டுமான நிலைமை பற்றி சீன வணிகத் துணை அமைச்சர் ஷெங் ச்சியூபிங் அறிமுகம் செய்தார்.


கடந்த 10 ஆண்டுகளாக, தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, உலகத்தின் முன்னணியில் உள்ள தொழில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம், முதலீடு, நாணயம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் எடுக்கப்பட்ட சீர்திருத்த மற்றும் திறப்பு நடவடிக்கைகள், பிரதேசத்தின் முக்கிய நெடுநோக்குத் திட்டம், பிரதேசத்தின் இசைவான வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் ஆகியவற்றுக்குச் சேவை புரிந்துள்ளன.


2022ஆம் ஆண்டு, அன்னிய முதலீட்டுத் தொகையிலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தொகையிலும், சீனாவின் தாராள வர்த்தகத்துக்கான 21 செயல்விளக்க மண்டலங்கள் முறையே 18.1 மற்றும் 17.9 விழுக்காட்டை வகித்தன. 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் இவ்விகிதங்கள் முறையே 18.4 மற்றும் 18.6 விழுக்காடாக உயர்ந்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author