சீனாவில் வாய்ப்புகள் மிக அதிகம்

அண்மையில் நடைபெற்ற போஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் 60க்கும் கூடுதலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 2000 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தகூட்டத்தில் ஆசியாவும் உலகமும், கூட்டு அறைகூவலும் கூட்டு பொறுப்பும் என்ற தலைப்பில் அவர்கள் ஆழமாக விவாதித்ததுடன், சீனாவின் ஆக்கப்பூர்வ பங்குகளைச் சுட்டிக்காட்டினர்.

சீனப்பொருளாதாரம் வலிமையான உள்ளார்ந்த ஆற்றலையும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக பல பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

ரஷிய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சீன மற்றும் நவீன ஆசிய ஆய்வகத்தின் தலைவர் பாப்பாயேவ் கூறுகையில், சிக்கலான அறைகூவல்களை எதிர்நோக்கும் சூழலில் ஆசியா, குறிப்பாக சீனா உலகளவில் பொருளாதாரம்த் துறையில் தொடரவல்ல வளர்ச்சியடையும் உறுதியான ஆற்றலாக மாறும். பொருளாதார அதிகரிப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி என இங்கே ஒளிமயமான எதிர்காலம் காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

தற்போது புதிய தர உற்பத்தி திறன்களின் வளர்ச்சி சீனப்பொருளாதாரத்தில் குவிமைய சொல்லாக மாறியுள்ளது. சீனாவின் உயர் தொழில் நுட்ப துறைகளிலான முதலீட்டுத் தொகை, தொடர்ச்சியாக 10 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்து வருகிறது. இதில் புதிய எரியாற்றலில் இயங்கும் வாகனம், லித்தியம் மின்கலம், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது.

இம்மன்றத்தின் கூட்டத்தில் புதிய தர உற்பத்தி திறன்கள் பற்றி பிரதிநிதிகள் கருத்துகளைத் தெரிவித்தனர். சீனாவிலுள்ள துருக்கி தூதர் முசா பேசுகையில், புதிய பொருளாதார வளர்ச்சி மாதிரிக்கு சீனா தயாராகிக் கொண்டிருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் தற்போது சீனா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் பெரும் அளவிலான வளர்ச்சி அதிகரிப்பை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் ஆண்டுதோறும் பத்து லட்சம் கோடி யுவான் நிலையான முதலீட்டு மற்றும் நுகர்வு சந்தையும் உருவாக்கப்படும் என்று தொடர்புடைய தரவுகள் காட்டுகின்றன.கூட்டு வளர்ச்சியடைவதற்கு வெளிநாட்டு திறப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. சீனப்பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி, வேறு நாடுகளுக்கு மாபெரும் சந்தையையும் ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் வழங்கும். உலகப் பொருளாதார அதிகரிப்பு மற்றும் நிதானத்துக்கும் ஆக்கப்பூர்வமான பங்கினை ஆற்றி வருகிறது என்று கருதப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author