சீனா-கசகஸ்தான் மானிடவியல் பரிமாற்ற நடவடிக்கை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24வது கூட்டத்தில் கலந்து கொண்டு, கசகஸ்தானில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.

இதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் ஜூலை 2ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் “மலைகள் மற்றும் ஆறுகள் இணைப்பு” எனும் சீனா-கசகஸ்தான் மானிடவியல் பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

இதற்கு அந்நாட்டு அரசுத் தலைவர் காசிம்-ஜோமார்ட் டோக்கேவ் வாழ்த்து தெரிவித்தார். கசகஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறை பிரதிநிதிகள், செய்தி ஊடகங்கள் மற்றும் கல்வி துறையைச் சேர்ந்த ஏறக்குறைய 100 பிரமுகர்கள் ஆகியோருக்கு முன், தொடர்புடைய துறைகளில் பல பயனுள்ள ஒத்துழைப்புகள் கையெழுத்தாகின. அதற்குப் பின்னர், இரு நாடுகள் கூட்டாக தயாரித்த “பொது கனவு” எனும் ஆவணப்படத்தின் ஒளிபரப்பை அவர்கள் கண்டு ரசித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author