சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் தொலைபேசி தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 2ஆம் நாள்,  அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

சீன-அமெரிக்க உறவு மற்றும் இரு தரப்பினரும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து நேர்மையாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில், நாங்கள் இருவரும் சான்ஃபிரான்சிஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எதிர்காலத்தை எதிர்நோக்கும் சான்ஃபிரான்சிஸ்கோ தொலைநோக்கு பார்வையை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

இவ்வாண்டில் சீன-அமெரிக்க உறவு குறிப்பிட்ட முக்கிய கோட்பாட்டுகளில் ஊன்றி நிற்க வேண்டும். முதலில், நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியம். மோதல் மற்றும் பகைமையைக் கைவிடுவதில் ஊன்றி நிற்க வேண்டும். அடுத்து, சீன-அமெரிக்க உறவுக்கான பொது நிலைமை நிதானமாக வளர்ந்து வருவதை நிலைநிறுத்த வேண்டும். இறுதியில், கூட்டு நம்பிக்கையைப் பின்பற்றி, நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த வாக்குறுதிகளை நனவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

தைவான் பிரச்சினை, சீன-அமெரிக்க உறவுக்கான முதலாவது எச்சரிக்கைக் கோடாகும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, தைவான் சுதந்திர சக்திகளுக்கு ஆதரவளிக்காது என்ற வாக்குறுதியை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், மனித உரிமை, தென் சீன கடல் முதலியவை பற்றிய நிலைப்பாடுகளை ஷிச்சின்பிங் விளக்கிக்கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author