சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சி நிறைவு

8ஆவது சீன-ஆசிய ஐரோப்பியப் பொருட்காட்சி ஜுன் 30ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நடப்புப் பொருட்காட்சியில் 360க்கும் அதிகமான ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்புடைய உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டன.

புதிய எரியாற்றல் மற்றும் புதிய மூலப் பொருட்கள், மின்னணு தகவல் தொழில் நுட்பம், நிலக்கரியை மூலப்பொருளாக கொண்ட வேதியியல் உற்பத்தி, நெசவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள், வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்ட மொத்த தொகை 61 ஆயிரம் கோடி யுவானாகும் என்று இப்பொருட்காட்சியின் செயலகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.


50 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன. 27 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், இப்பொருட்காட்சியில் அரங்குகளை அமைத்தன. சீனாவில் உள்ள ஆயிரத்துக்கு மேலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வாரியங்களும் இதில் கலந்து கொண்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author