சீன-தஜிகிஸ்தான் ஒத்துழைப்பில் புதிய எதிர்காலம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 4முதல் 6ஆம் நாள் வரை தஜிகிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளுக்கிடையே புதிய யுகத்தில் விரிவான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை அமைப்பதாக இரு நாட்டு அரசுத் தலைவர்கள் அறிவித்தனர்.

புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விரிவான திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

முதலில், அரசியல் பரஸ்பர நம்பிக்கை, இரு நாட்டு உறவின் அடித்தளமாகும். இரண்டாவது, நடைமுறையாக்க ஒத்துழைப்பு, இரு நாட்டு உறவு வலுவாக வளர்வதற்கான பொருள் சார் அடிப்படையாகும். இந்தப் பயணத்தின்போது, தஜிகிஸ்தானின் தரமிக்க தயாரிப்புகளை இறக்குமதி செய்வது, ஒன்றுக்கொன்று தொடர்பு மற்றும் திறப்பை ஆழமாக்குவது, கனிம வளத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வேளாண்மையில் ஒத்துழைப்பு நிலைமையை உயர்த்துவது உட்பட முன்மொழிவுகளை சீனா முன்வைத்தது. மேலும், புதிய ஆற்றல், எண்ணியல் பொருளாதாரம், செயற்கை நண்ணறிவு, இணையவழி வர்த்தகம் முதலிய துறைகளில் இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஆற்றலை வளர்க்க வேண்டும் என்று சீனத் தரப்பு தெரிவித்தது. மேற்கூறிய முன்மொழிவுகள், தஜிகிஸ்தான் வகுத்த 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டு வளர்ச்சி திட்டப்பணியின் சில அம்சப் பகுதிக்குப் பொருத்தமாக இருக்கின்றது.

மேலும், மக்களுக்கு நலன் தரும் பரிமாற்றம் அதிகரிப்பு காரணமாக, இரு நாட்டு மக்களுக்கிடையேயான புரிந்துணர்வு அதிகரிக்கும் என நம்புகின்றோம்.

தவிரவும், பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்தவும், இரு நாட்டு எல்லை மற்றும் பிராந்திய பாதுகாப்பைப் பேணிகாக்கவும், பலதரப்பு அமைப்புமுறையில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகள் ஒப்புகொண்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author