சீன-தஜிகிஸ்தான் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தஜிகிஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள போது, சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த சீன-தஜிகிஸ்தான் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி ஜூலை 5ஆம் நாள் துஷான்பே நகரில் நடைபெற்றது. அத்துடன், “சீனாவைக் கூட்டாகப் பார்ப்போம்” என்னும் சீன-தஜிகிஸ்தான் செய்தியாளர்களின் பணி பயண நிகழ்ச்சி துவங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங், தஜிகிஸ்தான் பண்பாட்டு அமைச்சர் சடோரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முன்னாள் தலைமைச் செயலாளர் அலிமோவ் முதலியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

ஷென் ஹாய்சியுங் கூறுகையில், தஜிகிஸ்தான், சீனாவின் நட்பார்ந்த அண்டை நாடாகும். தற்போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், இந்த நாட்டுக்குப் புதிய உயிராற்றலை ஊட்டியுள்ளது. கடந்த ஆண்டின் மே திங்கள், சீன ஊடகக் குழுமமும், தஜிகிஸ்தான் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி கமிட்டியும், ஒத்துழைப்புக் குறிப்பாணையில் கையொப்பமிட்டன.

முன்னதாக, சீன ஊடகக் குழுமம் தயாரித்த நிகழ்ச்சிகள், தஜிகிஸ்தானில் ஒளிப்பரப்பப்பட்டு, இரு நாட்டு மக்களின் பரிமாற்றத்துக்கான ஜன்னலாக விளங்கியுள்ளன. தஜிகிஸ்தானின் பல்வேறு துறையினருடன் இணைந்து பண்பாடு மற்றும் நாகரிகப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இரு நாட்டுறவை முன்னேற்ற சீன ஊடகக் குழுமம் விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author