சீன-மலேசியத் தலைமையமைச்சர்கள் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், மலேசியத் தலைமையமைச்சர் அன்வாருடன் ஜுன் 19ஆம் நாள் முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு ஒத்துழைப்புகளை உறுதியுடன் ஆழமாக்கி, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை, மேலும் உயரமான நிலைக்கு உயர்த்தி, மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற இரு நாட்டுத் தலைமையமைச்சர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.


லீ ச்சியாங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-மலேசியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன-மலேசிய நட்புறவு ஆண்டாகும். மலேசியாவுடன் இதை வாய்ப்பாக கொண்டு, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புகிறது என்றார்.


அன்வார் கூறுகையில், ஒரே சீனா கொள்கையை மலேசியா உறுதியுடன் பின்பற்றுகிறது. சீனாவுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author