ஜப்பானின் அணு கழிவு நீர் வெளியேற்றத்துக்கு சில மேற்கத்திய நாடுகள் ஏன் கவலையடையவில்லை?

அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டம் குறித்து, பசிபிக் தீவு நாடுகள், பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பெரு, சீனா, தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் பல முறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிரொலி விவாதிக்கப்படத்தக்கது.
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட பிறகு, இதனை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

சர்ச்சையுடன் கூடிய ஜப்பானின் இத்திட்டம் குறித்து மேற்கத்திய அரசியல்வாதிகள் மௌனமாக இருக்கின்றனர்.
ஜப்பானின் அணு கழிவு நீர் குறித்து குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகள் ஏன் இவ்வளவு கவலையடையவில்லை? அதன் காரணம் அவற்றின் சுய நோக்கம் மற்றும் அவமானகரமான வரலாற்றுடன் தொடர்புடையது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்கா , 1954ஆம் ஆண்டு மார்ச் முதல் நாள் அமெரிக்கப் படை மார்ஷல் தீவுகளில், வரலாற்றில் இதுவரை வலிமை மிகுந்த அணு ஆயுதமான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பை நடத்தியது. தவிரவும், அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள அணு சோதனை தளத்தில் 130டன்னுக்கு அதிகமான அணு கழிவு மண் மார்ஷல் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நேரடியாக வைத்தது.

இன்று கூட, அமெரிக்கா தனது தவறுகள் குறித்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி அமலாக்க வேண்டிய இழப்பீடுகளை பெருமளவில் கொடுக்கத் தவிர்த்துள்ளது. இப்படி பார்த்தால், அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்தை அமெரிக்கா ஒப்புக்கொள்வதை எளிதல் புரிந்து கொள்ளலாம்.


அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜப்பானுடன் அணு பாதுகாப்பைக் கொண்டு நலன் பரிமாற்றமாகப் பயன்படுத்தியுள்ளது. 2ஆவது உலகப் போருக்குப் பின், ஜப்பான்-அமெரிக்க கூட்டாணியில் அணு என்பதற்குச் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஜப்பான் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் முக்கிய கருவியும் அதுவாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author