ஜப்பானில் சீனக் காய்கறிகளின் இறக்குமதி அதிகரிப்பு

ஜப்பான் நாட்டில் காய்கறி விளைச்சல் குறைந்து வருவதால், செப்டம்பர் முதல் ஜப்பானிய சந்தையில் சீனக் காய்கறிகளின் இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது
ஜப்பானிய ஊடக செய்திகளின்படி, டோக்கியோ மொத்தச் சந்தையில் செப்டம்பர் திங்களில் கொள்முதல் செய்யப்பட்ட கேரட்டின் அளவு கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகரித்து 280 டன்களாக இருந்தது.

இதில் 90 சதவீதத்திற்கும் மேல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. செப்டம்பரில் பச்சை வெங்காயத்தின் இறக்குமதி 164 டன்களை எட்டியுள்ளது, இது ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்..
கோடையில் அதிக வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு குறைந்ததால், ஜப்பானில் காய்கறி விளைச்சலும் தரமும் குறைந்துள்ளது.

இருப்பினும், ஷான்டொங் மாகாணம் உட்பட சீனாவின் பல இடங்களில் இந்த ஆண்டு காய்கறிகள் அமோகமாக விளைச்சலைக் கண்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ஜப்பான் கடந்த ஆண்டு புதிய காய்கறிகள் மற்றும் உறைந்த காய்கறிகள் உட்பட மொத்தம் 27 இலட்சத்து 10 ஆயிரம் டன் காய்கறிகளை இறக்குமதி செய்துள்ளது. அவற்றில், சீனா இறக்குமதிக் காய்கறிகள் பாதிக்கு மேல் உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author