ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்கா ஒன்றியம் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் உண்டு

புது தில்லியில் நடைபெற்ற 18வது ஜி20 உச்சிமாநாடு செப்டம்பர் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. இம்மாநாட்டின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இணைவதை பல்வேறு தரப்புகள் ஒரு மனதாக ஒப்புக்கொண்டன.

ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் நீண்டகால முயற்சிகளின் மூலம் பெற்ற சாதனை இதுவாகும். அத்துடன், உலக கட்டமைப்பின் மாற்றம் மற்றும் வெளிப்புறச்சக்திகளின் முயற்சியுடன் இது நெருக்கமான தொடர்புடையது.


ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்கா ஒன்றியம் சேர்வதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் நல்ல நண்பரான சீனா, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் மேலும் பெரும் பங்காற்றுவதற்கு எப்போதுமே ஆதரவளித்து வருகிறது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில், ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் சேர்வதை ஆக்கமுடன் முன்னேற்றும் என்று சீனா மீண்டும் தெரிவித்தது.


நெடுநோக்கு பார்வையில், மூலவளங்கள், மக்கள் தொகை மற்றும் சந்தையின் பெரும் மேம்பாடுகள் ஆகியவற்றை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்துடன் செவ்வனே ஒன்றிணைந்தால், வளர்ச்சிக்கான மேலதிக உள்ளார்ந்த ஆற்றலை அது வெளிக்கொணரும். தற்போதைய ஆப்பிரிக்காவுக்கு, மேலதிக சமத்துவம், மதிப்பு மற்றும் ஒத்துழைப்புகள் தேவை.

Please follow and like us:

You May Also Like

More From Author