ஜெர்மனி பாடல் குழுவுடன் பெங்லியுவான் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியார் பெங்லியுவான் அம்மையார், 28ம் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டு வரும் ஜெர்மனியின் போ லே என்ற சீன மொழி பாடல் குழுவினர்களைச் சந்தித்து வரவேற்பு தெரிவித்தார்.


பெங்லியுவான் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பாடல் மூலம் அதிகமான நட்பார்ந்த சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. போ லே பாடல் குழு, சீன-ஜெர்மனி பண்பாட்டுப் பரிமாற்றப் பாலத்தை உருவாக்கி, இரு நாட்டு நட்புக்கான சிறந்த சின்னமாக மாறியுள்ளது.

மாணவர்கள் தொடர்ந்து நவரசமான இசை மூலம், சீனப் பண்பாட்டின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொண்டு, சீன-ஜெர்மனி நட்புக்கான புதிய தலைமுறை தூதர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


ஜெர்மனி போ லே பாடல் குழு தலைமை இயக்குநர் மில்மன், பெங்லியுவானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இசை மற்றும் சீன மொழி பரிமாற்றப் பாலத்தின் மூலம், இரு நாட்டு இளைஞர்களிடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்பைத் தொடர்ந்து அதிகரிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author