டிஜிட்டல் பொருளாதாரத்தில் ருவாண்டாவின் காபி தொழில் வளர்ச்சி

சீனாவுக்கான ருவாண்டாவின் தூதர் ஜேம்ஸ் கிமோனியோ இணைய நேரலையில் பலமுறை பங்கேற்று, தனது நாட்டின் தனிச்சிறப்புமிக்க வணிகப் பொருட்களை விளம்பரம் செய்துள்ளார்.

அவர், சீன இணையப் பயன்பாட்டாளர்களிடையே ருவாண்டாவின் சிறந்த பிராண்ட தூதர் என அழைக்கப்படுகிறார்.
ருவாண்டா நாட்டில் காபி தோட்டங்களை அதிகமாக காணலாம். உயரமான மலைகள் மற்றும் சிறந்த மண் ஆகிய காரணமாக, ருவாண்டாவின் காபி பின்ஸ் தனிச்சிறப்புமிக்கது.


இந்நாட்டில், 30 நபர்களில் ஒருவர் காபி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றர். ஆப்பிரிக்க கண்டத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள ருவாண்டாவுக்கு சர்வதேச வர்த்தகம் சுமுகமாக நடைபெறுவதில்லை. பதனீடு செய்யபடாத காபி பின்ஸ் ஏற்றுமதியில் ருவாண்டா முக்கியமாக ஈடுபட்டுள்ளது.

காபி விவசாயிகள் கடினமாக உழைக்கும் போதிலும் அதிக வருவாய் பெற முடியவில்லை.
2018ஆம் ஆண்டு ஜுலை திங்கள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ருவாண்டாவில் பயணம் மேற்கொண்டபோது, பல ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாயின. இவற்றில், மின்னணு வர்த்தகத் துறையிலான ஒத்துழைப்பு அடக்கம். சில மாதங்களுக்குப் பிறகு, வர்த்தக இணையதளம் மூலமாக, காபி பீன்ஸ் ருவாண்டாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் அந்நாட்டு காபி பீன்ஸ் காட்சிக்கு வைக்கப்பட்டு சீன நுகர்வோரிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக, டிஜிட்டல் பட்டுப் பாதை செயலுக்கு வந்ததுடன், காபி பீன்ஸ் நேரடியாக நுகர்வோருக்கு விற்கப்படலாம்.

இதனால், காபி விவசாயிகளுக்கு ஒரு கிலோ காபி பீன்ஸ் விற்கப்படும் போது, கூடுதலாக 4 அமெரிக்க டாலர் லாபம் ஈட்டுகின்றனர்.
சீனாவில் டிஜிட்டல் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியைக் கண்டு, சீனாவுக்கு ருவாண்டாவின் தூதர் கிமோனியோ, தனது நாட்டின் தனிச்சிறப்புமிக்க வணிகப் பொருட்களை சீனச் சந்தைக்கு அறிமுகம் செய்யவும், இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்திற்கு பாலத்தை உருவாக்கவும் முயற்சி செய்து வருகின்றார்.


ருவாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை நனவாக்க சீனா முனைப்புடன் உதவி வழங்கி வருகிறது. இது, பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை ஏற்படுத்துகிறது. 2022ஆம் ஆண்டு ருவாண்டாவின் பொருளாதாரம் 8.2 விழுக்காடு வளர்ச்சியை கண்டு, ஆப்பிரிக்காவில் மிக விரைவான வளர்ச்சி அடைந்துள்ள பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author