ட்சேஜியாங்கிற்கு ஷி ச்சின்பிங் புதிய கோரிக்கைகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் ட்சேஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, இம்மாநிலம் புதிய வளர்ச்சி கருத்தை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்தி, பொது செழுமைக்கான செயல் விளக்க மண்டலத்தையும், புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்புமுறையின் மேம்பாடுகளை காட்டுவதற்கான ஜன்னலையும் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை முழுமூச்சுடன் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


செப்டம்பர் 20, 21 ஆகிய நாட்களில், ஜின்ஹுவா, ஷாவ்சிங் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, கிராமப்புறம், வணிகச் சந்தை, காட்சியகம், பண்பாட்டுப் பூங்கா ஆகியவற்றில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். 21ஆம் நாள் பிற்பகல் ட்சேஜியாங் மாநில கட்சிக் குழு மற்றும் அரசின் பணியறிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.

பல்வேறு பணிகளில் ட்சேஜியாங் பெற்றுள்ள சாதனைகளை பாராட்டியதோடு, இம்மாநிலத்துக்கு புதிய கோரிக்கைகளையும் முன்வைத்தார். அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தில் ட்சேஜியாங் முன்னணியில் இருக்க வேண்டும். பொது செழுமையை முன்னேற்றுவதில் ட்சேஜியாங் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.

சீர்திருத்தத்தை ஆழமாக்கி திறப்பை விரிவாக்குவதில் ட்சேஜியாங் புதிய முன்னேற்றம் அடைய வேண்டும். சீனத் தேசத்தின் நவீன நாகரிக கட்டுமானத்தில் ட்சேஜியாங் ஆக்கமுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் 24ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிற்குத் திரும்பும் வழியில், ஷி ச்சின்பிங் ஷான்டோங் மாநிலத்தின் சாவ்சுவாங் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். மாதுளம்பழத் தொழிலுக்குப் புகழ்பெற்ற இந்நகரின் யீசேங் பகுதியிலுள்ள மாதுளம்பழ விதை வங்கியில், மாதுளம்பழ மரக் கன்றுகள், உள்ளூர் நடவு வரலாறு, விதை வள சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, உள்ளூர் மக்களின் வருமானம் உள்ளிட்டவை பற்றி அவர் அறிந்து கொண்டார். மாதுளம்பழத் தொழிலில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன

. இத்தொழிலின் வணிகச் சின்னத்தை உருவாக்கி, உற்பத்தி தரத்தை உயர்த்தி, போட்டியாற்றல் மற்றும் விரிவான பயன்களை வலுப்படுத்துவதன் மூலம் மேலதிக உள்ளூர் மக்கள் கூட்டாகச் செல்வமடையச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author