நவ்ரு அரசுத் தலைவருக்கு சி.ஜி.டி.என் சிறப்புப் பேட்டி

Estimated read time 0 min read

அண்மையில், நவ்ரு அரசுத்தலைவர் டேவிட் அடியாங், சீனாவின் சி.ஜி.டி.என்னுக்கு சமீபத்தில் சிறப்புப் பேட்டி ஒன்று அளித்தார்.

சாலமன் தீவுகள் நாட்டின் தலைநகர் ஹோனியாராவில் பசிபிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றபோது, எங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், சாலமன் தீவுகளில், குறிப்பாக ஹோனியாராவில் சீனாவாலே கொண்டு வரும் மாற்றத்தை நேரில் அறிந்து கொள்வதற்காகவும், ஹோனியாராவுக்குச் செல்லுமாறு நவ்ரு அரசு அதிகாரிகள் எனக்கு ஆலோசனை தெரிவித்ததாக டேவிட் அடியாங் கூறினார்.

தொடர்ந்து, சீனாவின் உதவியுடன், ஹோனியாராவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்த்தேன் என்றும், சீனாவின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் தரம் உயர் நிலையை எட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.

வலிமையான திறன் மற்றும் உதவும் மனப்பான்மையைக் கொண்ட சீனா, ஒன்றுக்கொன்று மதிப்பு அளிக்கும் அடிப்படையில், நாட்டின் அளவைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும், ஏழை, பணக்காரர், பலசாலி, பலவீனமானவர்கள் என அனைவரும் சமம் என்பதைக் கடைப்பிடிக்கிறது. இவை எனது புரிதலை புதுப்பித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author