பாய்ஹேதான் நீர் மின் நிலையத்தின் மின் உற்பத்தி 10000 கோடி கிலோவாட்டைத் தாண்டியது

பாய்ஹேதான் நீர் மின் நிலையத்தின் மின் உற்பத்தி 10000 கோடி கிலோவாட்டைத் தாண்டியது

அக்டோபர் 12ஆம் நாள் வரை, பாய்ஹேதான் நீர் மின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி அளவு 10 ஆயிரம் கோடி கிலோவாட்டைத் தாண்டியுள்ளது.

சுமார் 8 கோடியே 24 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு இது சமமாகும். ஜியாங்சூ, ட்சேஜியாங் உள்ளிட்ட இடங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்பப்படும் இந்த தூய்மையான மின்னாற்றல், யாங்ச்சி ஆற்றின் கழிமுகப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான மின் நுகர்வை உறுதி செய்துள்ளது.


ஆண்டுதோறும் 6000 கோடி கிலோவாட்டுக்கு மேல் தூய்மையான மின்னாற்றலை பாய்ஹேதான் நீர் மின் நிலையம் உற்பத்தி செய்கிறது. அதன் அதிகப்பட்ச தினசரி மின் உற்பத்தி, 14.8 கோடி மக்களின் அன்றாட மின் நுகர்வை நிறைவு செய்ய முடியும்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் அனைத்து மின்னாக்கிகளும் உற்பத்தில் இறங்கிய பிறகு, சீனாவின் கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலையின் நிறைவேற்றத்துக்கும், தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பசுமை மாற்றத்துக்கும் இந்நிலையம் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author