பிஜி சுதந்திரம் பெற்ற 53வது ஆண்டு நிறைவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

பிஜி சுதந்திரம் பெற்ற 53வது ஆண்டு நிறைவையொட்டி, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 10ஆம் நாள் பிஜி அரசுத் தலைவர் வில்லியம் கட்டோனிவேருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.


ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-பிஜி தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட பிறகு, இரு நாட்டுறவு சீரான வளர்ச்சியடைந்து, இரு நாட்டு மக்களின் நலன்களை வலுப்படுத்தி, பிரதேச அமைதியை முன்னேற்றி வருகிறது. அரசுத் தலைவர் கட்டோனிவேருடன் இணைந்து, சீன-பிஜி பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறேன் என்றார்.


அதேநாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், பிஜி தலைமையமைச்சர் சிதிவேணி ரபுகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author