பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா உதவியளிப்பது ஏன்?

Estimated read time 1 min read

பிலிப்பைன்ஸில் அரை மின் கடத்தி ஆலைகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிப்பதற்கு அமெரிக்கா உதவியளிக்குமென அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ராய்மோடோ அம்மையார் 12ஆம் நாள் பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தெரிவித்தார்.


இதற்கு முன்பு, பிலிப்பைன்ஸ் மீதான அமெரிக்காவின் முதலீடு அதிகம் இல்லை. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டு புதிய அரசு நிறுவப்பட்ட பின்பு, “இந்தோ-பசிபிக் நெடுநோக்கை” முன்னேற்றிய அமெரிக்கா பிலிப்பைன்ஸை நெருக்கமாக்கிச் செயல்படுத்தியுள்ளது.

ஆனால் அதன் மீதான முதலீட்டுத் தொகை அதிகரிக்கவில்லை.
புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸின் 6ஆவது பெரிய முதலீடு நாடு அமெரிக்கா ஆகும். முதலீட்டுத் தொகை சுமார் 100கோடி அமெரிக்க டாலர் ஆகும்.

அதே வேளை, தாய்லாந்து மீதான அமெரிக்காவின் முதலீடு சுமார் 230கோடி அமெரிக்க டாலராகும். பிலிப்பைன்ஸின் மக்கள் தொகை தாய்லாந்தை விட, 4கோடியை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருளாதாரத்தில் பிலிப்பைன்ஸை நெருக்கமாக்கிய அமெரிக்காவுக்கு மேலும் ஆழமான புவிசார் அரசியல் சதி உண்டு. ஆதாவது, பிலிப்பைன்ஸ் மூலம் சீனாவை எதிர்த்து தடுப்பதாகும். எடுத்துக்காட்டாக, தென் சீன கடல் பிரச்சினையில், அமெரிக்கா மேலும் ஆழமான நிலையில் தலையிட்டுள்ளது.


பிலிப்பைன்ஸ் பொறுத்தவரை, அமெரிக்காவின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி அதன் நியாயமற்ற சிந்தனைகளை நனவாக்க விரும்புகிறது. சீனாவின் ரெனாய் பாறை மற்றும் ஹூவாங்யென் தீவுப் பகுதியில் பிலிப்பைன்ஸ் இயல்பாக ஊடுருவிச் சீனாவின் அரை மின் கடத்தி வளர்ச்சியை அமெரிக்கா தடுக்க முயல்வதன் மூலம் பிலிப்பைன்ஸ் பலன்களைப் பெற விரும்புகிறது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author