பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனநாயகம் பற்றிய பொது கருத்துக்கள்

அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற “ஜனநாயகம்:முழு மனித குலத்தின் பொது மதிப்பு” என்ற சர்வதேச கருத்தரங்கில், பல நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விருந்தினர்கள், “ஜனநாயகம் மற்றும் மேலாண்மையின் நவீனமயமாக்கம்”, “செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம்”, “பலதுருவ உலகில் ஜனநாயகம் மற்றும் உலக மேலாண்மை” ஆகியவை குறித்து ஆழமாக விவாதித்தனர்.

முழு மனித குலத்துக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்வது ஜனநாயகத்தின் நோக்கமாகும். பன்னாட்டு மக்கள் வளர்ச்சியின் பாதையை சொந்தமாக தெரிவு செய்யும் உரிமையை மதிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பெயரில், சர்வதேச சமூகத்தில் பிளவை உருவாக்கி, தப்பு எண்ணத்தைப் பரவல் செய்து, அமைதியைச் சீர்குலைப்பதை எதிர்க்க வேண்டும் என இக்கருத்தரங்கில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இத்தாலி முன்னாள் தலைமையமைச்சர் மாசிமோ தாலேமா கூறுகையில், ஜனநாயகம், மேலை நாடுகளுக்கே உரிய கண்ணோட்டம் அல்ல. மேலை நாட்டு ஜனநாயகம், உலகின் இதர பிரதேசங்களுக்குத் திணிக்கப்படக் கூடாது. தற்போது மேலை நாட்டவர்கள் சிலர், ஜனநாயகத்தின் பெயரில் மேலை நாடுகளுக்கும் உலகின் இதர பிரதேசங்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கி, புதிய பனி போரைத் தொடுக்க விரும்புவது, ஆபத்தானது என்று தெரிவித்தார்.
நடப்பு கருத்தரங்கில் “மக்களை மையமாக கொண்ட” சீனாவின் முழு போக்கிலான மக்கள் ஜனநாயகத்தை விருந்தினர்களில் பலர் பாராட்டினர். இது, மக்களின் அடிப்படை நலன்களை வெளிக்காட்டுவதுடன், மக்களின் வளர்ச்சி தேவையை நிறைவு செய்யும் ஜனநாயகத்தின் மாதிரியாகவும் உள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


இக்கருத்தரங்கில் ஜனநாயகம் தொடர்பாக விருந்தினர்கள் எட்டிய பொது கருத்துக்கள், ஜனநாயகம் குறித்து சர்வதேச சமூகம் மேலும் நன்றாக புரிந்து கொள்வதற்கு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வருகின்றன. ஜனநாயகம் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. அவை குறித்து பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது நினைவூட்டுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author