போட்டியாளருக்கு பதிலாக சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளியாக இருக்க வேண்டும்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை ஏப்ரல் 26ஆம் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், போட்டியாளருக்குப் பதிலாக, இரு நாடுகள் கூட்டாளியாக இருக்க வேண்டும். சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்பதற்குப் பதிலாக, அமெரிக்கா சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சீன தரப்புக்கான அரசியல் வாக்குறுதிகளை மீண்டும் தெளிவுபடுத்திய அமெரிக்கா, சீனாவுடன் தொடர்புகளை நிலைநிறத்தி, சான் பிரான்சிஸ்கோ சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை செயல்படுத்தி அமெரிக்க-சீனா உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உயர்மட்டத் தலைவர்கள் தொடர்பு மேற்கொண்ட போது, ஒவ்வொரு முறையும் உத்திப்பூர்வ புரிதல் குறித்து விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளிங்கனின் இப்பயணத்தில், அமைதியான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் ஒரு சோசலிச நாடான சீனாவுக்கு பெரிய நாடு மேலாதிக்கம், பனிப்போர் சிந்தனை, வெற்றி-தோல்வி விளையாட்டுச் சிந்தனை ஆகியவை போன்ற மரபணுக்கள் இல்லை. இவை, சீனாவின் நடத்தை முறை அல்ல என்றும் சீனா வலியுறுத்தியது.

தற்போது, சீன-அமெரிக்க உறவில் நிலைப்புத்தன்மை  போக்கு எட்டப்படுவது எளிமையானதல்ல. இது இரு நாடுகளிலும் சர்வதேச சமூகத்திலும் வரவேற்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author