மனித உரிமைகளுக்கான நீதிபதிகள் மேலை நாடுகள் அல்ல

உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் பற்றிய மன்றக் கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

அதில், பாதுகாப்பு மூலம் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல், வளர்ச்சி மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை முன்னேற்றுதல், உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பு, உலக வளர்ச்சி முன்னெடுப்பு மற்றும் உலக நாகரிக முன்னெடுப்பை நடைமுறைப்படுத்துதல் முதலான கருத்துகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.


உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் குறித்து சீனா முன்வைத்த புதிய கருத்து இதுவாகும். இவை, சர்வதேச மனித உரிமைகள் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு முக்கிய வழிகாட்டலைத் தந்துள்ளன.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது மனிதகுலத்தின் பொது விருப்பமாகும். அதனை அரசியல் நோக்கத்திற்காகவோ, ஆயுதமாகவோ பயன்படுத்த கூடாது.

ஆனால், சில மேலை நாடுகள் ஒரு புறம் சொந்த நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, மறு புறம், மனித உரிமையைச் சாக்குபோக்காகக் கொண்டு பிற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு பிற நாடுகளின் வளர்ச்சியை தடுத்து வருகின்றன.

மனித உரிமைகளுக்கான நீதிபதியாவதற்கு எந்த நாட்டிற்கும் தகுநிலை இல்லை என்று சீனா கருதுகிறது. மனித உரிமைகளின் வளர்ச்சிப் பாதையைச் சுயசார்பாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு.
வாழ்த்துக் கடிதத்தில் பண்பாடு மற்றும் நாகரிக பரிமாற்றங்களை வலுப்படுத்தி மனித உரிமை நாகரிக வளர்ச்சியின் மேம்பாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற கருத்து மனித உரிமைத் துறையிலுள்ள கருத்து வேற்றுமையைக் களைய உதவும் என்றும், வியன்னா அறிக்கை மற்றும் செயல்பாட்டுப் பணித்திட்டத்தில் ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை முன்னேற்றும் முக்கிய குறிக்கோளையும் வெளிக்காட்டியுள்ளது என்றும் இம்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author