மாற்றமும் குழப்பமும் நிறைந்திருக்கும் உலகிற்கு உறுதித்தன்மையை அளிக்கும் சீன-ரஷிய உறவு

மாற்றமும் குழப்பமும் நிறைந்திருக்கும் உலகிற்கு உறுதித்தன்மையை அளிக்கும் சீன-ரஷிய உறவு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதினுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மற்றும் சிறிய அளவிலான சந்திப்புகளை மே 16ஆம் நாளன்று மேற்கொண்டார்.

கடந்த 75 ஆண்டுகளில் வெற்றிகரமான அனுபவங்களை தொகுத்து, இரு தரப்புறவு மற்றும் கூட்டாக கவனம் செலுத்தி வரும் சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அதேவேளையில், இருவரும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான புதிய எதிர்காலத்தை வகுத்துள்ளனர்.

கூட்டறிக்கை வெளியீடு, பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகியவை, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அணி சேராமல், பகைமை இன்றி, பிற தரப்பை இலக்கு வைக்காதது உள்ளிட்ட கொள்கையைப் பின்பற்றும் சீன-ரஷிய உறவு, புதிய ரக சர்வதேச உறவுக்கான சிறந்த மாதிரியை உருவாக்கியுள்ளது. இது மாற்றமும் குழப்பமும் நிறைந்திருக்கும் உலகிற்கு உறுதித்தன்மையை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


2013ஆம் ஆண்டு முதல், சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் 40முறைக்கும் மேலாக சந்திப்பு நடத்தினர். தலைவர்களின் வழிகாட்டலில், இரு நாட்டுறவு வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. சீனாவில், மண் ஒன்று திரண்டு, மலைகளானது , தண்ணீர் ஒன்று சேர்ந்து கடலானது என்ற பழமொழி உண்டு.

ரஷியாவில், பெரிய கப்பல் தொலைதூரமாக பயணித்தால் வெற்றி நிச்சயம் என்று கூறப்படுவது உண்டு. 75 ஆண்டுகளாக கடந்து நீடிக்கும் சீன-ரஷிய உறவில் பல ஒத்துழைப்புச் சாதனைகள் படைக்கப்பட்டன.

நல்ல அண்டை வீட்டார்கள், நல்ல நண்பர்கள் மற்றும் நல்ல கூட்டாளிகளான இரு நாடுகள், தத்தமது வளர்ச்சியை மேம்படுத்தும் முன்னேற்றப் போக்கில், உலகிற்கு மேலதிக நேர்மறையான சக்தி அளிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author