ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புலனாய்வு: தொற்றுநோய் காலத்தில் சீனாவின் தடுப்பூசி மீது அவதூறு பரப்பிய அமெரிக்கா

கோவிட் தொற்றுநோய் மிகக் கடுமையாக இருந்த காலத்தில், பிலிப்பைன்ஸில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினைப் பலவீனமாக்கும் விதமாக, அமெரிக்க ராணுவம் ஒரு ரகசிய பிரச்சார நடவடிக்கையை தொடங்கியது.
முன்னதாக, எந்த ஒரு செய்தி ஊடகமும் இந்த ரகசிய நடவடிக்கைகளை வெளியிடவில்லை. பிரிட்டனின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புலனாய்வின்படி, அமெரிக்க ராணுவத்தின் இந்த நடவடிக்கையின் நோக்கம், சீனா வழங்கிய தடுப்பூசி மற்றும் வேறு உதவிப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை மற்றும் பயன் மீது மக்களிடையே சந்தேகங்களை எழுப்புவதாகும். போலியான சமூக ஊடகக் கணக்குகளில், சீன தடுப்பூசிக்கு எதிர்ப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் பரப்பி வந்தது. அதில், முகக் கவசம், சோதனைச் சாதனம், பிலிப்பைன்ஸில் சந்தையில் இருந்த சினோவாக் தடுப்பூசி ஆகியவற்றின் மீது கருத்து ரீதியான தாக்குதல் மற்றும் அவதூறு செய்யப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் குறைந்தபட்சமாக 300 கணக்குகள், அந்த தகவலை அறிந்த முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை போன்றது. கிட்டத்தட்ட அனைத்து கணக்குகளும் 2020ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. மேலும், #Chinaangvirus என்ற குறிச்சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன.
இந்த பிரச்சாரம், 2020ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் தொடங்கப்பட்டு, தென்கிழக்காசியாவை தவிர வேறு பகுதிகளுக்கும் விரிவாகியது. இறுதியில் 2021ஆம் ஆண்டு முற்றுப்புள்ளிக்கு வந்த்து என்று ராய்ட்டர்ஸ் மதிப்பிட்டுள்ளது.
இந்த பிரச்சார நடவடிக்கை, முன்னாள் அரசுத் தலைவர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கப்பட்டு, ஜோ பைடன் பதவியேற்ற பிற்கு சில மாதங்களில் தொடர்ச்சியாக நீடித்தது என்று ராய்ட்டர்ஸ் கண்டறிந்த்து. ஆனால், அமெரிக்க ராணுவம் அமெரிக்க மக்களை இலக்கு வைத்து இத்தைய பிரச்சாரம் செய்ய தடை விதித்தது.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அமெரிக்க மக்களுக்கு மத்தியில் அதைப்போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதன் ஆதாரத்தை ராய்ட்டர்ஸ் கண்டுபிடிக்கவில்லை.
சீனாவின் தடுப்பூசி மீது அவதூறு பரப்பும் விதம், அமெரிக்க ராணுவம் வளரும் நாடுகளிடையே இந்த ரகசிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயர்நிலை அதிகாரி ஒருவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த அதிகாரி அது தொடர்பான மேலதிக விவரங்களைக் கூற மறுத்து விட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author