லீ ஷுலெய் மற்றும் நியூயின் ட்ரொங் நஹியா பேச்சுவார்த்தை

லீ ஷுலெய் மற்றும் நியூயின் ட்ரொங் நஹியா பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் ஜூன் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பரப்புரைத் துறையின் அமைச்சருமான நியூயின் ட்ரொங் நஹியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லீ ஷுலெய் கூறுகையில், வியட்நாம் தரப்புடன் இணைந்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் வியட்நாம் அரசுத் தலைவர் குயின் பு ட்ரொங் ஆகியோர் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்தச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், பரப்புரைத் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆட்சி முறையின் அனுபவங்களையும் பரிமாற்றங்களையும் ஆழமாக்கி, பாரம்பரிய நட்பை வெளிக்கொணர்ந்து, சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் நெடுநோக்கு வாய்ந்த பொதுச் சமூக எதிர்காலத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author