வசந்த விழா கலை நிகழ்ச்சியின் கருப்பொருள் மற்றும் இலச்சினை வெளியீடு

2024 வசந்த விழா கலை நிகழ்ச்சியின் கருப்பொருள் மற்றும் இலச்சினை வெளியீடு

2024ஆம் ஆண்டு பிப்ரவரி நடைபெறும் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வக் கருப்பொருள் மற்றும் இலச்சினையை சீன ஊடகக் குழுமம் சனிக்கிழமை வெளியிட்டது.


வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினைக்கு, 龘என்ற சீன எழுத்து முக்கியக் காட்சி சின்னமாகச் சூட்டப்பட்டுள்ளது. அதற்கு, டிராகன் உயரமாகப் பறப்பது என்று பொருட்படுகிறது.

செழிப்பு அடைந்து வரும் 140 கோடி சீன மக்களை பிரதிபலிக்கும் டிராகன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களுக்கு எழுச்சி மற்றும் மரபுச் சின்னமாகத் திகழ்ந்து வருகிறது.


பண்டைய சீன முத்திரை வரிவடிவத்திலிருந்து வரும் இந்த இலச்சினையின் வடிவமைப்பு, மதிப்பு, நேர்மை, சமச்சீர் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதுடன், பிரமாண்டம் மற்றும் சக்தி வாய்ந்த கலாச்சார சூழ்நிலையையும் வெளிப்படுத்துகிறது.


டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் நாளிரவு ஒளிபரப்பப்பட உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author