வெளிநாடுகளைச் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ்

Estimated read time 1 min read

அமெரிக்கா, ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகியவை பிலிப்பைன்ஸுடன் இணைந்து தென் சீனக் கடலில் கூட்டு ராணுவப் பயிற்சியை முதன்முறையாக நடத்தின.

நான்கு நாடுகளும் இணைந்து தமது இராணுவ வலிமையை வெளிப்படுத்தியதன் நோக்கம், சீனாவை எதிர்த்துப் போராடுவதாகும் என்று பிலிப்பைன்ஸ் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டின. 

வாஷிங்டனில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஜப்பான்-பிலிப்பைன்ஸ் உச்சிமாநாட்டில், பிலிப்பைன்ஸ் வெளிநாடுகளுடன் இணைந்து, தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிடுவது, தென் சீனக் கடல் சர்ச்சையைச் சர்வதேசமயமாக்கும் நோக்கம் தெளிவானது. சீன மக்கள் விடுதலை இராணுவப் படையின் தெற்கு மண்டலம், தென் சீனக் கடற்பரப்பில் கடல் மற்றும் வான் படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. தென் சீனக் கடலில் தலையிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டில் உள்ளன.

பிராந்திய அமைதியைப் பின்தொடர்வதாக பிலிப்பைன்ஸ் வாய்மொழியாகக் கூறியது. ஆனால் உண்மையான நடவடிக்கைகள் பகைமையையும் மோதலையும் உருவாக்கின. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், அமெரிக்கா உள்ளிட்ட வெளி சக்திகளின் ஆதரவுதான். 

இராணுவ மற்றும் பாதுகாப்பு துறையில் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு சக்திகளை பெரிதும் சார்ந்துள்ளது. உதவிகளை வழங்குவது, கூட்டு இராணுவ பயிற்சிகள் மற்றும் கூட்டு பயணங்களின் மூலம் இந்த வெளிநாடுகள் பிலிப்பைன்ஸைக் கட்டுப்படுத்தியுள்ளன என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

பிலிப்பைன்ஸின் தென் சீனக் கடல் கொள்கை, சீனாவை அடக்குவதற்கான அமெரிக்காவின் மேலாதிக்க கருவியாக படிப்படியாக மாறி வருகிறது. இந்த வெளிநாடுகளைப் பிலிப்பைன்ஸ் சார்ந்திருப்பது, ஆபத்தான பாதையில் தன்னை அழைத்துச் செல்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author