வெள்ளத்தடுப்புப் பணிகள் பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், வெள்ளத்தடுப்பு மற்றும் வறட்சித்தடுப்புப் பணிகள் குறித்து முக்கிய உத்தரவிட்டார்.


ஷி ச்சின்பிங் கூறுகையில், அண்மையில், சீனாவின் தென் பகுதியின் பல இடங்களில் கடும் மழை பெய்தது. குவாங்தொங், ஃபூஜியான் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலவியல் சீற்றங்களில் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சீற்ற நிலைமையை முழுமூச்சுடன் சமாளித்து, பாதிக்கப்பட்ட மக்களை உகந்த முறையில் குடியமர்த்தி, இயல்பான வாழ்க்கை மற்றும் உற்பத்தி ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.


மேலும், பல்வேறு பிரதேசங்கள் மற்றும் தொடர்புடைய பிரிவுகள், இடர்ப்பாட்டுக்கான விழிப்புணர்வையும், ஒட்டுமொத்தமான பணியையும் வலுப்படுத்தி, நிவாரண பணியைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும். தவிரவும், பேரழிவுக்கான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை வலுப்படுத்தி, திடீர் சம்பவங்களைப் பயன்தரும் முறையில் சமாளித்து, பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பையும், சமூகத்தின் நிலைத்தன்மையையும் பேணிக்காக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author