ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றிய பொது மக்கள் கருத்துக் கணிப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் கசகஸ்தானில் ஒன்றுக்கூடி, பிரதேச பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினை குறித்து கலந்தாய்வு செய்யவுள்ளனர்.


சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.ஏன் நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, 20க்கும் மேலான ஆண்டுகள் வளர்ச்சியுடன், பிரதேச பாதுகாப்பு உத்தரவாதம், ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் பாலம், பயனுள்ள ஆற்றல் ஆகியவற்றுக்கான அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாறியுள்ளது என்று பொதுவாக கருதப்பட்டுள்ளது.

உலகின் தெற்கு நாடுகளுக்கு ஆதரவளித்து, மேலும் நியாயமான மற்றும் சமத்துவமான சர்வதேச ஒழுங்கின் உருவாக்கத்தை முன்னேற்றும் என எதிர்பார்ப்பதாக 82.8 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.


மேலும், பிரதேச மற்றும் சர்வதேச சமூகத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செல்வாக்கு மென்மேலும் உயர்ந்து வருகிறது என்றும் 89.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர். பிரதேச பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதில் இவ்வமைப்பின் பெரும் பங்கினை 83.7 விழுக்காட்டினர் பாராட்டினர்.


பாதுகாப்பானது, வளர்ச்சியின் அடிப்படையாகும். சீனா முன்வைத்த உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு கருத்துக்குப் பொருந்தியது.

நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமைகள், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று 91.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.


தவிரவும், உலக மேலாண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று 82.8 விழுக்காட்டினர் எதிர்ப்பார்ப்பு தெரிவித்தனர்.


இக்கருத்து கணிப்பு, ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு, ரஷியா ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் 13527 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை வெளியிட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author