ஷாங்காய் மற்றும் ஜியாங்சூவில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.


இப்பயணத்தின்போது, நிதி நிறுவனம், அறிவியல் தொழில் நுட்பப் பூங்கா, வீட்டு வசதி திட்டப்பணி முதலியவற்றை அவர் கேட்டறிந்தார்.
அவர் கூறுகையில், புதிய வளர்ச்சிக் கருத்தை ஷாங்காய் பன்முகங்களிலும் சரியாகவும் செயல்படுத்தி, உயர்தர வளர்ச்சியின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதாரம், நாணயம், வர்த்தகம், போக்குவரத்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் ஆகிய 5 துறைகளில் ஷாங்காயை சர்வதேச மையமாகக் கட்டமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாகத்தை வழிக்காட்டலாகவும், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை இயக்காற்றலாகவும் கொண்டு, உலகில் செல்வாக்குமிக்க நவீனச் சோஷலிச மாநாடாக ஷாங்காயைக் கட்டியமைத்து, சீனப் பாணி நவீனமயமாக்க கட்டுமானத்தில் இந்த மாநகரம் மேலும் பங்காற்றச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


டிசம்பர் 3ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் திரும்பும் வழியில் ஜியாங்சூ மாநிலத்தின் யான்சேங் நகரிலுள்ள புதிய 4ஆவது ராணுவப் படையின் நினைவுக் காட்சியகத்தை ஷி ச்சின்பிங் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் ஆதரவு வரலாற்றின் தேர்வைத் தீர்மானிக்கும் என்பதை புதிய 4ஆவது ராணுவப் படையின் வரலாறு முழுமையாக நிரூபித்துள்ளது.

மக்களை நெருக்கமாக சார்ந்திருந்து, நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author