ஷிச்சின்பிங் கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை

ஜுலை 10ஆம் நாள் மாலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவர் உமாரோ சிசோகோ எம்பாலோவுடன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவை நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் கினியா-பிசாவ் குடியரசுக்கும் இடையே சிறப்பான நட்புறவு வரலாறு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருநாட்டுறவு ஆழமாகி வருகிறது. ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை மேலும் உறுதியாகவும், நடைமுறை ஒத்துழைப்பு மேலும் விரிவாகவும், சர்வதேச ஒருங்கிணைப்பு மேலும் நெருக்கமாகவும் மாறியுள்ளன. கினியா-பிசாவ் குடியரசு தனது தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சி பாதையைச் சொந்தமாகத் தேடுவதைச் சீனா ஆதரிக்கிறது. கினியா-பிசாவ் குடியரசுடன் பாரம்பரிய நட்புறவை கடைபிடிக்கவும், ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை பலப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை விரிவாக்கவும், இருநாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவின் அர்த்தத்தை மேம்படுத்தவும், தேசிய வளர்ச்சியை சிறப்பாக நனவாக்க கினியா-பிசாவ் குடியரசுக்கு உதவவும் சீனா விரும்புகிறது என்றார்.

நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்குவதற்குரிய சீன மக்கள் குடியரசு மற்றும் கினியா-பிசாவ் குடியரசின் கூட்டு அறிக்கையை இருதரப்பும் கூட்டாக வெளியிட்டன. 

Please follow and like us:

You May Also Like

More From Author