ஷென்சோ-16 விண்கலத்தின் பயணம் வெற்றி

ஷென்சோ-16 விண்கலத்தின் திரும்பு கலம் அக்டோபர் 31ஆம் காலை 8:11 மணி அளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

மூன்று விண்வெளிவீரர்களின் உடல்நலம் சிறந்த நிலையில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷென்சோ-16 விண்கலம் மனிதரை ஏற்றிச்சென்ற பயணம் வெற்றி பெற்றது.


இவ்வாண்டின் மே 30ஆம் நாள், ஷென்சோ-16 விண்கலம் ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டு, தியான்ஹே மைய கலத்துடன் இணைத்தது.

அங்கே மூன்று விண்வெளிவீரர்கள் 154 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author