19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார் ஷி ச்சின்பிங்

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாளிரவு ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் சிறப்பாகத் துவங்கியது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஆசியாவின் பல்வேறு இடங்களிருந்து வந்த தலைவர்கள் மற்றும் விருந்தினர் முதலியோர் இப்போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
ஷி ச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பேங் லியுவான், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிக தலைவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ஆகியோர் தலைமை மேடைக்கு வந்த பிறகு, சீனத் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு தொடங்கியது. 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் அரங்கில் அடுத்தடுத்து அணு வகுத்தன. 1329 பேர் கொண்ட சீனப் பிரதிநிதிக் குழுவில் 886 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். நடப்பு விளையாட்டுப் போட்டியில் அவர்கள் 38 விளையாட்டுகளின் 407 போட்டிகளில் போட்டியிடுகின்றனர்.


ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிக தலைவர் சிங் உரை நிகழ்த்துகையில், சீன அரசு, சீன ஒலிம்பிக் கமிட்டி, ஆசிய விளையாட்டு போட்டியின் அமைப்புக் குழு உள்ளிட்ட தரப்பினருக்கு மரியாதை மற்றும் பாராட்டு தெரிவித்ததோடு, ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் மறக்க முடியாத அருமையான நினைவுகளைப் பெறுவர் என நம்புவதாகவும் தெரிவித்தார்.


இரவு 9:16 மணிக்கு, 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதாக சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அறிவித்தார்.
அதற்குப் பிறகு 3 பகுதிகளாக நடைபெற்ற சிறந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில், 40 விளையாட்டுகளின் 61 பிரிவுகளைச் சேர்ந்த 481 போட்டிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author