4வது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் பொருட்காட்சி நடைபெறவுள்ளது

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் மார்ச் 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, 4வது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் பொருட்காட்சி பற்றி அறிமுகம் செய்தது.


நடப்பு பொருட்காட்சி ஏப்ரல் 13 முதல் 18ஆம் நாள் வரை ஹைய்நான் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்குகளின் நிலப்பரப்பு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சதுர மீட்டரை எட்டி, வரலாற்றில் புதிய சாதனையை பெறவுள்ளது. 59 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேலான தொழில் சின்னங்கள் இதில் பங்கெடுக்கவுள்ளன.


மேலும், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் கொள்வனவு வணிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன், சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 10 முக்கிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கொள்வனவுக் குழுக்களும், உலக முன்னணியிலுள்ள நிறுவனங்களின் 100க்கும் மேலான உயர்நிலை அதிகாரிகளும் இதில் பங்கெடுக்கவுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author