இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்..! இன்றைய ராசி பலன்கள்..!

Estimated read time 1 min read

மாசி மாதம் 7ம் தேதி [பிப்ரவரி 19, 2024] இன்றய  ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று சோர்வு மற்றும் கவலைகள் ஏற்படும் , வேலையில் சற்று கவனம் தேவை .துணையுடன் சகஜமாக அனுசரித்து செல்வது நல்லது. இன்று தேவையற்ற செலவு ஏற்படலாம்,  உடல்நிலையில் கவனம் தேவை உடற்பயிற்சி செய்வது நல்லது.

ரிஷபம்:

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகள் இருக்கும்பணியில் ஏற்றம் இறக்கம்காணப்படும்  .உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.  இன்று செலவுகள் அதிகமாக இருப்பதால் வருத்தப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

இன்றைய நாள் சவாலான நாளாகும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவது நல்லது.  பணியிட சூழல் அதிருப்தி அளிக்கும் . துணையுடன் நட்புடன் பழகுவது நல்லது. இன்று நீங்கள் கடன் வாங்க வேண்டி வரலாம், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:

இன்று நன்மைகள் கிடைக்கும் நாளாகும், முக்கிய முடிவுகள் எடுக்க முடியும், வேலையில் வளர்ச்சி உண்டாகும். உங்கள் துணையிடம்  அதிகமான அன்பை வெளிப்படுத்துவீர்கள் .இன்று ஊக்கத்தொகை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தேக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

சிம்மம்:

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் ,முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும் இன்று வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் லாபம் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கன்னி:

இன்று எதார்த்தமான அணுகுமுறை தேவை. வெளியிடங்களுக்கு சென்று வருவது நல்லது. உங்கள் பணி நன்றாக இருக்கும். துணை இடத்தில் சகஜமான அணு முறை வேண்டும். செலவினங்கள் அதிகம் காணப்படும் நாளாக இருக்கும் .உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

துலாம்:

இன்று சற்று சவால்கள் நிறைந்திருக்கும் நாளாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் பொறுமையை கையாண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் பண இழப்பு நேர வாய்ப்புள்ளது .ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தியானம் மேற்கொள்வது அமைதியைத் தரும்.

விருச்சிகம்:

இன்று நற்பலன்களும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வது மகிழ்ச்சியை தரும். உங்களுக்கு இன்று பணம் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

இன்று நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களின் பணிக்கான பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடையலாம். இன்று முதலீடுகள் செய்ய உகந்த நாள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மகரம்:

இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்க தைரியமும், உறுதியும் அவசியம். இன்று பணியில் தவறு செய்ய நேரலாம் கவனமாக கையாளுவது அவசியம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறையை மேற்கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும் .பயணத்தின் போது பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

கும்பம்:

உங்கள் அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும். இன்று பணியில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது .உங்கள் துணை உங்களிடம் முரண்பட்டு இருப்பதாக உணர்வீர்கள். செலவுகள் அதிகமாக காணப்படும் நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை குளிர்ந்த பானங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

இன்று அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணப்படும் .பணிகளில் புதிய வாய்ப்புகள் திருப்தியை தரும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் அதிர்ஷ்டமான பண வரவு ஏற்படும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

The post இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்..! இன்றைய ராசி பலன்கள்..! appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author