இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையும்? இன்றைய ராசிபலன்..!

Estimated read time 1 min read

Today Horoscope-பங்குனி மாதம் 9ம் தேதி[ மார்ச் 22,2024] இன்றைக்கான ரசிப்பலனை இங்கே காணலாம் .

மேஷம்:

இன்று நீங்கள் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கு கொண்டு ஆறுதல் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும். உங்கள் துணையின் விருப்பப்படி செயலாற்றினால் மகிழ்ச்சி நிலைக்கும். பணத்தை சாதுரியமாக செலவு செய்யவும். பதட்டம் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் பதட்டப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் அணுகு முறையில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். பணிகளை பொறுமையாக கையாளவும், உங்கள் துணையுடன் அதிக நெருக்கம் காணப்படும். செலவினங்கள் அதிகரிக்கலாம் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:

இன்று உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும் .புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் மனதை அமைதியாக வைத்து மகிழ்ச்சியோடு இருங்கள் .பணப்புழக்கம் போதுமானதாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். முக்கிகள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் .தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் .தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது, தியானம் மேற்கொள்ளவும்.

சிம்மம்:

இன்று மிதமான பலன்களே  காணப்படும், நண்பர்கள் கூட எதிரிகள் ஆகும் சூழ்நிலை உருவாகும். பணிகளை உறுதியுடன் மேற்கொள்வது நல்லது. உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும் .ஆரோக்கியத்தின் கவனம் தேவை.

கன்னி:

பதட்டம் காரணமாக இன்று நீங்கள் பல சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும் .பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும், உங்கள் துணையுடன்  நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்துங்கள், பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. பதட்டம் அடையாமல் இருந்தால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

துலாம்:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ,இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். பணியிடத்தில் நற்பலன்கள்  காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். நிதி வளர்ச்சி பிரகாசமாக இருக்கும். இன்று சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

விருச்சிகம்:

இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும் .புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும் .உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

இன்று அதிக பொறுப்புகள் காரணமாக பதட்டம் அடைவீர்கள், அதனால் பணிகளை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையுடன் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். நிதிநிலைமை சுமாராக இருக்கும். சளி இருமல் போன்ற பாதிப்புகள் காணப்படும்.

மகரம்:

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேற உகந்த நாள் அல்ல. பணியில் சவால்களை சந்திப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும் .நிதி நிலைமை மந்தமாக இருக்கும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

கும்பம்:

இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களிடம் அதிக உறுதியும் தைரியமும் காணப்படும் .பணிகளை எளிதாக முடிப்பீர்கள் கூடுதல் ஊதியத்தையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வுடன் பேசுவீர்கள். இன்று அதிக பண வரவு கிடைக்கும் .ஆரோக்கியம் திடமாக இருக்கும்.

மீனம்:

இன்று உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி  செல்வீர்கள். உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும் ,மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் நல் உறவு காணப்படுகிறது. நிதிநிலைமை முன்னேற்றகரமானதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

The post இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையும்? இன்றைய ராசிபலன்..! first appeared on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author