இன்றைய ராசிபலன்கள் .!உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் ?

Estimated read time 1 min read

Today horoscope-பங்குனி மாதம் 13ஆம் தேதி [மார்ச் 26, 2024 ]இன்றைக்கான  காண ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு வேலையில் உயர்வு கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். அதிர்ஷ்ட எண்= 5 அதிர்ஷ்டமான நிறம்= பச்சை.

ரிஷபம்:

இன்று நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும், துணை இடத்தில் அன்பு அதிகரிக்கும். பணியிடத்தில் சுமூகமான பலன்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட எண்= ஆறு, அதிர்ஷ்ட நிறம்= வெள்ளை.

மிதுனம்:

இன்று வெளி இடங்களில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் ,பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும், யோகமான நாளாக இருக்கும். சகோதரர்களிடம்  கருத்து வேறுபாடு காணப்படுகிறது ,சிறிது பதட்டம் ஏற்படலாம். இன்று கடன் வாங்காமல் இருக்கவும் .அதிர்ஷ்ட எண்= இரண்டு, அதிர்ஷ்ட நிறம்= இளம் சிறப்பு.

கடகம்:

இன்று நீங்கள் மற்றவர்களை விமர்சிப்பதை தவிர்க்கவும். காவல்துறையினரால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும் .முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள் .பணவரவு சிறப்பாக இருக்கும் .அதிர்ஷ்ட எண்= மூன்று, அதிஷ்ட நிறம்= தேன் வண்ணம்..

சிம்மம் :

இன்று நீங்கள் இழந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. துணையுடனான  உறவுகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்= 4, அதிர்ஷ்ட நிறம் = பாக்கு வண்ணம்.

கன்னி:

இன்று சற்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும் .குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது .மற்றவர்களின் கடனில்  தலையிடாமல் இருப்பது நல்லது ,இளைய சகோதரர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டவும் .அதிஷ்ட எண்= 7 ,அதிர்ஷ்ட நிறம் = கத்தரிப்பு வண்ணம்.

துலாம்:

வேலை நிமித்தமாக இடமாற்றம் ஏற்படலாம், காதல் கல்யாணம் கை கூட வாய்ப்புள்ளது. தொழிலில் வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாள் சற்று கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்= மூன்று ,அதிர்ஷ்ட நிறம் =சிவப்பு.

விருச்சிகம்:

வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் கிடைக்கும், பதவி உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுகளின் கவனம் செலுத்தவும். அதிர்ஷ்ட எண்= 9, அதிர்ஷ்ட நிறம் =அடர் சிகப்பு.

தனுசு:

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் பேச்சு வார்த்தைகளில் மட்டும் கவனம் தேவை. மனசாட்சிக்கு பயந்து நடந்து கொள்வது அவசியம், சகோதரர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, பொறுமையை கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை .அதிர்ஷ்ட எண்= ஒன்று, அதிர்ஷ்ட நிறம்= மாணிக்க வண்ணம்.

மகரம்:

இன்றைய நாளில் புது வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .திருமண வாழ்க்கை கை கூடி வரும். அதிர்ஷ்ட எண் =5 ,அதிர்ஷ்ட நிறம் = ராமர் பச்சை.

கும்பம்:

இன்றைய நாளில் பேச்சில் கவனம் செலுத்தவும், யோசித்து செயல்படவும். உடல்நல குறைவு ஏற்படும். வம்பு வழக்குகளில் ஒதுங்கி போவது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். அதிர்ஷ்ட எண்= இரண்டு, அதிர்ஷ்ட நிறம் =பச்சை.

மீனம்:

இன்று பண வரவு நன்றாக இருக்கும். வேலை வாய்ப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றவும் வாய்ப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை இனிதாக்கும் .அதிர்ஷ்ட எண்= ஒன்று ,அதிர்ஷ்ட நிறம்= மாணிக்க வண்ணம்.

The post இன்றைய ராசிபலன்கள் .!உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் ? first appeared on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author